பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய கல்வி கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது, எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது நமது திராவிட மாடல்.

இன்னார் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது பாஜகவின் காவி மாடல். கல்வியை காவிமயமாக்க பாஜக முயற்சி செய்கிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது என கூறியுள்ளார்.