சென்னையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

இதையடுத்து பேசிய துணை முதலமைச்சர் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு போராடும். புதிய கல்விக் கொள்கை என்பது இந்தியாவை பின்னோக்கி எடுத்துச் சொல்லும் வேதகால விஷமாகும். தமிழ்நாடு எத்தனையோ சூழ்ச்சிகளை எதிர்த்து வென்றதைப் போல் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து வெல்லும் என்று கூறினார்.