
தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஜியா தமிழக அரசு பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். இவர் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனது சக தோழிகள் மற்றும் ஆசிரியர்களுடன் பழகியதன் மூலம் தமிழை கற்றுக் கொண்டதாக ஜியா கூறினார். மேலும் அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு இலவச சீருடை, காலனி, புத்தகங்கள் எல்லாமே நான் நன்றாக படிக்க காரணம் என ஜியா கூறியுள்ளார்.
ஜியாவை போலவே அவரது மூத்த சகோதரி ரியாகுமாரியும், தங்கை சுப்ரியா குமாரியும் அழகாக தமிழ் பேசுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசி எழுதி வரும் ஜியா 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழை தொடர்ந்து படிப்பேன் என கூறியுள்ளார்.
பல்லாவரம் அடுத்த கவுல் பஜாரில் அரசு பள்ளியில் படித்த ஜியா குமாரி தமிழக அரசின் திட்டங்கள் தனக்கு உதவிகரமாக உள்ளதாக பேட்டி அளித்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் “தமிழ்நாடு எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு – எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை!#வாழ்க_தமிழ்♥️ https://t.co/kVVP0mQCyW
— M.K.Stalin (@mkstalin) May 17, 2025