கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வளையமாதேவி கிராமத்தில் பிரபு தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில் இவர்களது மகள் சிவானி ஸ்ரீ கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று ரிசல்ட் வெளியானது.
இவர் 500-க்கு 201 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். மாணவி குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மிகவும் மன வேதனையில் இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி துடித்த நிலையில் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
