
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் சுமார் 45 நிமிடங்களாக வானில் வட்டமடித்தது.
அந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக தரையிறங்க முடியாமல் தவிர்க்க விமானம் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்புவனம் பகுதிகளில் சுற்றி வந்து மாலை 6.05 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.