
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் NDA கூட்டணியில் இணைந்து தான் கடந்த நாடு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். அந்த கூட்டணியில் தான் இன்று வரை இருக்கின்றோம்.
இதை யார் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று கூறினார். மேலும் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னைக்கு வந்திருந்தார். அவர் எங்களை அழைத்துப் பேசாதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.