திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே விளாங்குப்பத்தில் ராஜா, சின்ன பாப்பா என்ற தம்பதியினர் வசித்து வருகிறனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சின்ன பாப்பாவுக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க வலியுறுத்தி ராஜா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சின்ன பாப்பா தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ராஜா, தனது மனைவியை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்ததில் 3 வயது குழந்தை அதாவது சின்ன பாப்பாவின் பேத்தி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.