புதுக்கோட்டையில் குருங்கலூர் வேளாணி கிராமம் ஒன்றே உள்ளது. இந்த கிராமத்தில் இன்று பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த பிறந்தநாள் விழாவில் கருப்பையா(60) என்பவர் கலந்து கொண்டு அசைவ உணவுகளை சாப்பிட்டுள்ளார்.

அதன் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.