
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவ ஊர்வலத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து பல்லக்கு புறப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் பாடல் பாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நடுரோட்டில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.