
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பாண்டி. இவரது மகன் ராஜ்(25). கூலி வேலை பார்க்கும் ராஜுக்கு கடந்த 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
கடந்த 8-ஆம் தேதி ராஜ் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் குருந்தன்கோடு பகுதிக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிவாவும், ராஜூம் படுகாயமடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.