லக்னோவின் குடம்பா பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபச்சாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த துயரங்கள் பற்றி கூறியுள்ளார்.

அந்த சிறுமி தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் பராமரிப்பு என்ற பெயரில் மாதம் 3000 ரூபாய் தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றார். ஆனால் சில வாரங்களில் கர்ப்பிணி பெண் அந்த சிறுமியை விபச்சாரத்தில் தள்ளினார்.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகமது ஷபான் உள்ளிட்ட சிலர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு மருந்துகள் கொடுத்து மயக்கத்தில் வைத்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் முகமது ஷபான் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.