அகமதாபாத்தில்  உள்ள ராதே ரெசிடென்சி குடியிருப்பில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 4 மாத பெண் குழந்தை ருஷிகாவை கையில் தூக்கிக்கொண்டு வந்தார். அப்போது ராட்வைலர் நாய் திடீரென குழந்தை மீது பாய்ந்து கடித்து குதறியது.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி குழந்தையை மீட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அந்த நாயை அழைத்து வந்த ஒரு பெண் செல்போன் பேசிக்கொண்டே நடந்து வந்தார். இதுதான் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

ராதே கமர்சியல் மற்றும் ரெசிடென்சி குடியிருப்பு சங்கத்தினர் பலமுறை ஆபத்தான நடத்தை குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள் குழந்தையை கடித்துக் நாயை அதிகாரிகள் மீட்டு தற்காலிக தங்கும் இடத்தில் பராமரித்து வருகின்றனர்.

பதிவு செய்யாமல் ஆபத்தான இன நாயை கட்டுப்பாடு இன்றி விட்டதற்காக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.