
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையாக மாறியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து எதற்காக அவர் அறிவித்தார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பியது. பின்னர் மத்திய அரசும் போர் நிறுத்தம் குறித்து உறுதிப்படுத்திய நிலையில் மூன்றாம் நாடு மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை எனக் கூறியுள்ளது.
அதாவது 1000 ஆண்டுகளாக நடக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண நான் உதவி செய்கிறேன் என ட்ரம்ப் கூறி இருந்த நிலையில் மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை என மத்திய அரசு கூறியதாக தகவல் வெளிவந்தது. அதன்பிறகு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர்த்தக உறவை நிறுத்தி விடுவேன் என கூறியதால்தான் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக சொன்னதை அவர் மறுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சவுதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா போரை நிறுத்துவதற்காக வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன் என்று கூறியுள்ளார். என்னுடைய தலையீட்டால்தான் போர் நிறுத்தப்பட்டது. மேலும் ஒப்பந்தம் செய்வோம் வர்த்தகம் செய்வோம் என அழைத்ததால் தான் போரை நிறுத்திவிட்டனர் என்று கூறியுள்ளார்.