
சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் வீட்டிலிருந்து சில பொருட்களுடன் தனது காரை நோக்கிச் செல்வதைக் காணலாம். அந்த நேரத்தில், காரின் கதவு திறந்திருந்ததை கவனித்த அந்த பெண், உள்ளே எதையோ வைக்க எண்ணி கதவைத் திறக்கிறார். ஆனால் அதே நேரத்தில், அவர் எதிர்பாராதவிதமாக காருக்குள் ஒரு கரடி திடீரென நகர்வதைப் பார்த்ததும், அவர் பயந்து கதவை மூட முயல்கிறார். அப்போதுன் அந்தக் கரடி காரில் இருந்து வெளியே வந்து நடந்துசெல்கிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
गर्मी ज्यादा पड़ रही थी तो , भालू गाड़ी की AC चला कर सो गया 😱😳😂😂😅 pic.twitter.com/LdszqrNTDC
— Shiwani Sharma (@shiwani_sharma1) May 11, 2025
இந்த வீடியோ X தளத்தில் @shiwani_sharma1 என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுடன் “மிகவும் சூடாக இருந்ததால் கரடி காரின் ஏசியை ஆன் செய்து தூங்கியது” என்ற நகைச்சுவையான வாசகமும் இடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “கரடி காரில் அமர்ந்து ஏசி ஆனில் தூங்கியது எனில், அது நம் வாழ்க்கையை விட அமைதியானது” என நக்கலுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு பயனர் “அவள் காட்டில் என்ன செய்து கொண்டிருந்தாள்?” என கேள்வி எழுப்ப, இந்த வீடியோ பெரும் வரவேற்பையும் கலகலப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.