
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் முஷ்கான் என்பவர் தன்னுடைய கணவர் சவுரவ் ராஜ் புத்தை கொடூரமாகக் கொன்று உடலை 15 துண்டுகளாக வெட்டி ட்ரமில் போட்டு சிமெண்ட் போட்டு பூசிய சம்பவம் பரபரப்புபை ஏற்படுத்தியது. தற்போது இதே போன்று ஒரு மனைவி தன் கணவனை கொலை செய்து கணவனின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா பகுதியில் 50 வயதான மாயாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அணில் யாதவ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் தன்னுடைய கணவர் தேவேந்திரகுமாரை கொலை செய்து பின்னர் உடம்பை 6 துண்டுகளாக வெட்டி தனித்தனி இடத்தில் வீசியுள்ளார்.
கடந்த பத்தாம் தேதி ஒரு ஆற்றின் கரையோரம் மனித கை மற்றும் கால்கள் கிடந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்படவே அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மறுநாள் அருகில் உள்ள ஒரு கிணற்றில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த பத்தாம் தேதி மாயாதேவி தன் கணவனை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தியதில் மாயாதேவி தான் தன் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாயாதேவியின் மகள் தன் தந்தையை தாய் கொன்று விட்டதாக கூறி காவல் நிலையத்தில் உரிய புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயாதேவி, அணில் யாதவ், அவரது நண்பர் சதீஷ் யாதவ், ஓட்டுநர் மிதிலேஷ் படேல் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். இதில் அவர்கள் தப்பி ஓட முயன்ற போது ஒருவருக்கு கால் பகுதியில் துப்பாக்கி கொண்ட குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்டவரின் உடல் பாகங்கள் அனைத்து மீட்கப்பட்ட நிலையில் தலை இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.