மத்தியப் பாடத்திட்டத்தில் (CBSE) 2024-ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், 93.66% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் 93.12% தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது ரோல் நம்பர் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.