பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்தியான் என்பவரது மகன் விமல்ஜோ(32) 16 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு விமல்ஜோ சிறுமியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விமல்ஜோ, அவரது தந்தை செபஸ்தியான் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் மாவட்டம் மகிளா நீதிமன்றம் விமல்ஜோவிற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் செபஸ்தியமயானுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் abaraath விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.