
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக ரோகித் சர்மா கடந்த 7ம் தேதி அன்று அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலியும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இங்கிலாந்து தொடருக்கு முன்பதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததால், அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் அவர் நேற்று தனது ஓய்வையை அறிவித்தார். இதையடுத்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது மிக்க நன்றி விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது. ஆனால் மரபு என்றென்றும் தொடரும். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் போற்றப்படும் என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.