
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீங்கள் ஓய்வு பெறும்போது, 12 ஆண்டுகளுக்கு முன்பு எனது கடைசி டெஸ்ட் போட்டியின் போது உங்கள் சிந்தனை மிக்க செயல் எனது நினைவுக்கு வருகிறது. அது எனக்கு மிகவும் தனிப்பட்ட ஒன்றாகும். அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அந்த செயல் எனது மனதை தொடும் விதமாக இருந்தது.
எண்ணற்ற இளம் தலைமுறையினர் கிரிக்கெட்டில் நுழைவதற்கான உத்வேகத்தை தூண்டியதுதான் உங்களது சொத்து. அசாத்தியமான டெஸ்ட் பயணம் உங்கள் வசமாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டுக்காக வெறும் ரண்களைத் தாண்டி கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட வீரர்களையும் ரசிகர்களையும் உருவாக்கி தந்துள்ளீர்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.