தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு சாட்சி விசாரணைகள் அனைத்து முடிவடைந்துள்ளது.

இதனால் இன்று நீதிபதி நந்தினி தேவி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் நிலையில் தமிழகம் முழுவதும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.