தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் பழைய கார் உடைக்கும் குடோன் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் நைட்ரஜன் சிலிண்டரில் இருந்த வாயு கசிந்து மேலும் அதிக அளவு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பின் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த விபத்தில் சுமார் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்க்கும் அதிகமான கார் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.