
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ரவி (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்த நிலையில் திருமணம் ஆகி செல்வி (45) என்ற மனைவியும் ரஞ்சினி (19), சந்தியா (17) என்ற மகள்களும் இருக்கிறார்கள்.
இதில் ரஞ்சனி பிஎஸ்சி நர்சிங் படித்து வந்த நிலையில் சந்தியா பிளஸ் 2 முடித்துள்ளார். சமீபத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் சந்தியா 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில் ரவி அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில் செல்வி மற்றும் ரஞ்சினி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்ததால் சந்தியா வீட்டிலிருந்து சமையல் செய்து கொடுத்துள்ளார். அதாவது சந்தியா சமையல் செய்து தன் அக்கா மற்றும் அம்மாவுக்கு அனுப்பிய நிலையில் நேற்று மதியம் நீண்ட நேரம் ஆகியும் சாப்பாடு வராததால் இருவரும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சந்தியா கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த நிலையில், அவருடைய தந்தை தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் தந்தை மகளுக்கு இடையே ஏதோ சண்டை நடந்துள்ளது. அப்போது கோபத்தில் தன் மகளை கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இருவரின் சடலங்களையும் மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.