பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்தனர். விழா தொடக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
அதன் பிறகு பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, இளைஞர்களே என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நல்ல படிப்பு வேலை வாய்ப்பை நான் வாங்கி தருகிறேன். நாம் வாழ வேண்டும் நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.
