
இந்திய ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 9970 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனத்தின்பேரில் நடைபெறவுள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2025 மே 19 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுடன் ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமா/இன்ஜினியரிங் பணி தொடர்புடைய துறைகளில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவுக்கு 3 வருடங்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வயது தளர்ச்சி வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,900 வழங்கப்படும்.
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு மற்றும் கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 500. எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கு ரூ. 250 மட்டுமே.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னதாக கடைசி தேதி மே 11 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு மே 19 என மாற்றப்பட்டுள்ளது.