
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறும்போது, இந்தியா தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து அழகத்த நிலையில் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது. பாகிஸ்தானின் f 16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா விமான தளத்தை வெற்றிகரமாக தாக்கினோம். நூர்கான் விமான தளம், ஜாக்கோபாத் விமான தளம், சக்கரில் உள்ள ரேடார் மையம் ஆகியவற்றை இந்திய ராணுவம் வெற்றி கரமாக அழித்தது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய நூல்களையும் நம்முடைய வீரர்கள் அழித்தனர் என்று கூறினார்.