இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இது பற்றி ராஜீவ் கய் கூறும்போது, குருத் வாரா மற்றும் கோயில்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகினார். எங்களுடைய இலக்கு தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் பயிற்சி முகாம்கள் மட்டுமே. நவீன உத்திகள் மூலம் எதிரிகளை துல்லியமாக குறி வைத்து மிக மிக எச்சரிக்கையாக இலக்குகளை தேர்வு செய்து தாக்குதல் நடத்தினோம்.

கடந்த எட்டாம் தேதி இரவு ஏராளமான ட்ரோன்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் நோக்கி வந்தது. நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த ட்ரோன்களை அழித்து இலக்குகளை காப்பாற்றினோம். மேலும் போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்று கூறினார்.

அதன்பிறகு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 40 பேர் இறந்ததாக தெரிவித்தார். மேலும் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை இந்தியா அழித்தது என்றும், விமான கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார்.