உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் 2 இளம் பெண்கள் வசித்து வருகிறார்கள். இந்த பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் சேர்ந்து ஒரு காரில் அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் லக்னோவில் திடீரென காரை நிறுத்திய நிலையில் பின்னர் பீர் வாங்கி வந்து காரில் வைத்து குடித்தனர்.

இதைத்தொடர்ந்து கார் கிளம்பிய நிலையில் மீரட் மாவட்டம் அருகே சென்றபோது திடீரென ஐந்து பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தில் இளம் பெண்களில் ஒருவரை அவர்கள் காரில் இருந்து கீழே தள்ளிவிட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

பின்னர் காரில் இருந்த அந்த சிறுமியை மட்டும் மூன்று பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமி அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்த நிலையில் பின்னர் போலீசாரை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் பாலியல் பலாத்காரம் செய்தது கௌரவ், அமித் மற்றும் சந்திப் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை பிடிப்பதற்காக அவர் போலீசார் சென்று நிலையில் திடீரென அவர்களுக்குள் துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்றது.

இதில் போலீசார துப்பாக்கியால் சுட்டதில் கௌரவ் மற்றும் சந்திப் ஆகியோருக்கு காலில் குண்டு காயம் பட்டது. பின்னர் அவர்களை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியவர் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.