மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நாளை சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சித்திரை முழுநிலவு மாநாட்டை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபான கடைகளிலும் கூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மகாபலிபுரத்தில் சித்திரை பௌர்ணமி இளைஞர் மாநாடு நடைபெற உள்ளது.

இதனால் பொது அமைதியை பேணுவதற்காக தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் 11-ஆம் தேதி நாளை மதியம் 1 மணி முதல் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல விழுப்புரத்தில் 34 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.