ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரியிடம் செல்போனில் குழந்தை இல்லாதது பற்றி புலம்பி அழுதுள்ளார். நேற்று மாதேஸ்வரன் கீதா இருவரும் நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.