காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக முறியடிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின் போது அவர்களின் ஆயுத கிடங்குகள், துறைமுகம், சியால்கோட் 6 உள்ளிட்ட முக்கிய பாகிஸ்தான் விமானத்தளங்கள் தகர்க்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் நாளுக்கு நாள் போர் பதற்றம் என்பது அதிகரித்து வரும் நிலையில் விடுமுறையில் உள்ள ராணுவ வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதால் தற்போது விடுமுறையில் இருக்கும் வீரர்கள் தாய் நாட்டிற்கு சேவை செய்ய பணிக்கு திரும்பி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு வீர பெண் தன்னுடைய ஒரு வயது குழந்தையை பிரிய மனமில்லாமல் தாய்நாட்டுக்கு கடமையாற்ற சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பலரது கண்களில் கண்ணீரையும் வரவழைத்துள்ளது. அதாவது அந்தப் பெண் தன்னுடைய ஒரு வயது குழந்தையை பிரிய மனமில்லாமல் அழுதபடி ரயிலில் ஏறி செல்லும் நிலையில் குடும்பத்தினர் கீழே நின்று வழி அனுப்பி வைக்கிறார்கள். மேலும் தாய்மையிலும் தேசத்திற்காக பணியாற்ற சென்ற அந்த தாயின் வீரம் தற்போது பலராலும் பாராட்டப்படுகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Prime9 Tamil (@prime9tamil)