
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அமைத்தார். இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு இசைஞானி இளையராஜா வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய ஒரு மாத எம்பி சம்பளத்தை நாட்டுக்காக கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதாவது தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு அனுப்புவதாகவும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக என்னுடைய இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் வழங்க இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறி வைத்து தகர்த்தது. இதனால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வரும் நிலையில் இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கியுள்ளது. மேலும் இந்திய ராணுவத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் பாராட்டி நிதி உதவி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.