
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ராணுவ வீரர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டதோடு உடனடியாக அவர்களை பணிக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் மனோஜ் தியானேஸ்வர் பாட்டீல் என்பவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது. இவருக்கு கடந்த 5-ம் தேதி யாமினி பாட்டீல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 3 நாட்களுக்கு பிறகு தேன்நிலவு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் நாட்டுக்காக பணி செய்ய அவர் கிளம்பிவிட்டார்.
सगळ काही भारत मातेसाठी…
लग्नाच्या तीन दिवसांनंतर महाराष्ट्राचे सुपूत्र मनोज पाटील देश सेवेसाठी रवाना… #oprationsindoor #IndianNavyAction #IndiaPakistanTensions #jalgaonnews #India #army #manojpatil #देशसेवा pic.twitter.com/1gmbhYcoTD— Ganesh Pokale… (@P_Ganesh_07) May 9, 2025
அவருடைய மனைவி கண்களில் கண்ணீரோடு இருந்தாலும் தன் கணவனை நாட்டுக்காக சேவை செய்வதற்காக தேசப்பற்றுடன் அனுப்பி வைத்தது ரயில் நிலையத்தில் இருந்தவர்களை கண் கலங்க வைத்தது. அவரை குடும்பத்தினரும் ஒன்றுகூடி பாரத் மாதா கி ஜே போன்ற கோஷங்களை எழுப்பி அனுப்பி வைத்தனர். இது பற்றி யாமினி கூறும் போது நாட்டை விட பெரியது எதுவும் இல்லை. நாட்டின் பாதுகாப்பிற்காக என் சிந்துரை நான் அனுப்புகிறேன் என்று உருக்கமாக கூறியது அங்கு இருந்தவர்களை கலங்க வைத்தது. இருப்பினும் நாட்டுப்பற்றோடு அந்தப் பெண் வீரமாக தன் கணவனை எல்லைக்கு பணி செய்ய அனுப்பினார். மேலும் இது ஒவ்வொரு இந்தியரின் நாட்டுப்பற்றையும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.