தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் திரு ஜெய் கிரண். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படம் மக்களிடம் கொண்டு செல்லும் உணர்வு பூர்வமான கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் பிரபலமான கேபிஒய் பாலா தனது சினிமா பயணத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் திரு ஷெரிப் ஆவார். இவர் “ரணம் அவர் அறம் தவறேல்” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய இந்த திரைப்படத்திற்கு அவர்தான் கதை மற்றும் திரை கதையும் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பற்றி அவர் கூறும் போது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான இந்த கதையை நான் தயாரிப்பாளரிடம் கூறினேன். அப்போது அவர் சற்றும் யோசனையில்லாமல் எனக்கு ஆதரவு கொடுத்தார்.

அது எனக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்தது என்று கூறினார். இந்தத் திரைப்படத்தில் விவேக் மெரின் என்பவர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கேபிஒய் பாலா, நடிகை நமிதா, பாலாஜி சக்திவேல், நடிகை அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.