
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல.
நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள். உங்களுக்கு இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளுங்கள். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு உத்தரவிட முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.