இந்திய ரயில்களில் தண்ணீர், தேநீர், காபி உள்ளிட்ட தேவையான பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படுவது தொடர்பாக பயணிகள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரேலி ரயில்வே நிலையத்தில், ஒரு பயணி தேநீர் விலை அதிகமாக இருப்பது  குறித்துக் கடைக்காரரிடம் புகார் கூறியுள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைக்காரர் பயணியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிளாட்பார்ம் எண் 1-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை @akaykumar25 என்ற பயனர் X தளத்தில் பகிர, “மோசமான தேநீர் விலை குறித்து புகார் அளித்த பயணியை கடைக்காரர் தாக்கியுள்ளார்” என பதிவு செய்துள்ளார். 17 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜிஆர்பி (ரயில்வே காவல்துறை) சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இதேபோன்று மே 7 அன்று ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணியை பாண்ட்ரி ஊழியர்கள் தாக்கிய வீடியோவும் சமீபத்தில் வெளியானதை மக்கள் இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.