
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நள்ளிரவில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து வரும் தலிப்பான் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. அதாவது தாக்குதல் நடத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண வேண்டும் என்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் வேண்டுகோள் வைத்துள்ளது.