
அமெரிக்காவில் உள்ள டம்பா நகரில் ஒரு சிறுவன் தக்காளி சாப்பிட்டு கொண்டு இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழலில் அருகிலிருந்த போலீசாரிடம் ஒருவர் அது பற்றி கூறிய நிலையில் உடனடியாக போலீசார் அந்த சிறுவனை bodycam செய்தனர். பின்னர் போலீசார் அந்த சிறுவனின் நிலையை புரிந்து கொண்டு முதுகில் மெதுவாக தட்டினார்.
உடனடியாக அந்த சிறுவன் தக்காளியை துப்பிவிட்ட நிலையில் மீண்டும் மெதுவாக சுவாசிக்க ஆரம்பித்தான். அந்த சிறுவன் மெதுவாக மூச்சு விட்ட நிலையில் போலீசாரின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டான். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி வருகிறார்கள்.