காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக பாகிஸ்தான் நாட்டவர்கள் விசாவினை இந்தியா ரத்து செய்வதோடு அவர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது. அதோடு சிந்து மற்றும் ஷெனாப் நதிநீரையும் நிறுத்திவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த எம்‌பி ஷர் அப்சல் கான் மர்வட் என்பவரிடம் செய்தியாளர்கள் இந்த பகல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது இந்தியாவுடன் போர் நடைபெற்றால் நீங்கள் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எல்லைக்கு செல்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்று விடுவேன் என்று கூறினார். அதன் பிறகு இந்த நடவடிக்கையில் இருந்து பிரதமர் மோடி பின்வாங்குவாரா என்று கேட்கப்பட்டதற்கு அவர் நான் சொல்வதைக் கேட்க அவர் எனக்கு அத்தை மகனா என பிரதமர் மோடியை கிண்டல் அடிக்கும் விதமாக கூறினார். மேலும் போர் நடந்தால் நாட்டை விட்டு ஓடி விடுவேன் என இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் கூறியுள்ளது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.