விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே செவலபுரை கிராமத்தில் கொத்தமல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஒரு 15 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த சிறுமியுடன் தான் வேலை பார்க்கும் இடத்தில் வைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்தார்.

இதனால் சிறுமி கர்பமான நிலையில் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது பற்றி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் செங்கல் சூளைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமிக்கு இன்னும் திருமண வயது ஆகாதது தெரிய வந்ததால் இது பற்றி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சின்னராசுவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.