
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். கடந்த 29-ஆம் தேதி ஜானகி ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்ற ஜானகியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணேஷ் ராஜலிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேஷ் ராஜ் வீட்டு கதவை தட்டி உள்ளார். அப்போது நீண்ட நேரமாக கதவைத் தட்டிய பிறகே ஜானகி கதவை திறந்து வெளியே வந்ததால் கோபமடைந்த கணேஷ் ராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் மகனின் நடைவண்டியை எடுத்து மனைவியின் தலையில் தாக்கியதால் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.