
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் திருமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட சிறுவன் 6 நாட்களாக அவரிடம் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை விட்டு நின்று விட்டார். அதன் பிறகு சிறுவன் தன் மாமாவிடம் வேலைக்கு சேர்ந்தான். இது ராமகிருஷ்ணனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் சிறுவனின் மாமாவிடம் ராமகிருஷ்ணனை அவனைப் பற்றி தவறாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக சிறுவன் ராமகிருஷ்ணனிடம் நியாயம் கேட்க நேற்று சென்ற நிலையில் அவர் மிகவும் கோபமடைந்து சிறுவனை மரத்தில் கட்டி வைத்து ஜாதி பெயரை சொல்லி கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.