
சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்ய மறுத்த வழக்குப்பதிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது தன்னுடைய மருமகனை ஆண்மை இல்லாதவர் என்று மாமியார் கூறியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக மருமகனை மாமியார் மற்றும் உறவினர்கள் தான் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தின்ல் விசாரணைக்கு வந்த நிலையில் மருமகனை தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது ஆதாரம் இல்லாததால் எஃப் ஐ ஆர்-ஐ ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒருவரை ஆண்மை குறைவு உள்ளவர் என்று கூறுவது தற்கொலைக்கு தூண்டுதல் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.