
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டல் பால்பட்டி மச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. நேற்றிரவு 8.15 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சி செய்தனர்.
Kolkata, West Bengal: A severe fire occurred last night at Rituraj Hotel in Kolkata’s Burrabazar area, resulting in 14 fatalities pic.twitter.com/DUiEJAsZ5A
— IANS (@ians_india) April 30, 2025
ஆனாலும் தீ விபத்தில் இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தியா, ரிதன் ஐயா மூன்று பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.