நியூசிலாந்தின் வீரர் டெவான் கான்வே. இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கான்வேவின் தந்தை தற்போது மரணம் அடைந்தார்.
இந்த செய்தியை சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததோடு அவசரமாக சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறியுள்ளது. மேலும் அவரின் தந்தை மறைவுக்கு தற்போது கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
