சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பால் வியாபாரம் பார்க்கும் முருகேசன்(63) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முருகேசன் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.