
தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் ஆளுநர் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார் என்றும் அவருக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அவர் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும் கூறியது. அதோடு ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு அந்த 10 மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு நாளிதழில் தற்போது 2023 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்களை அந்த நாளிலேயே ஒப்புதல் வழங்கியதாக கருத வேண்டும் என்று தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிய அந்த பத்து மசோதாக்களும் தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.