டெல்லி மெட்ரோவில் இருந்து வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சிக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பழுப்பு நிற டி-ஷர்ட் மற்றும் பேஜ் கலர் பேண்ட் அணிந்த ஒருவர், மெட்ரோ டிரெயினில் உட்கார்ந்து கையில் கொண்டிருந்த முட்டையை மெட்ரோவின் உலோக கைப்பிடியைப் பயன்படுத்தி தோல் உரித்து சாப்பிடுகிறார். அதே நேரத்தில், அவர் மதுபானம் அருந்துவதைப்போலவும் காட்சி வருகிறது. இந்த வீடியோ திட்டமிட்டுவே எடுக்கப்பட்டதா, அல்லது வேறு பயணி எடுத்து பதிவிட்டாரா என்பது தெளிவாகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

 

இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில்வே நிறுவனம் (DMRC) இதுவரை எந்த அதிகாரப்பூர்வக் கருத்தும் வெளியிடவில்லை. ஆனால், DMRC விதிகளின்படி, இரண்டு மதுபானக் பாட்டில்களை  எடுத்து  செல்ல அனுமதிக்கப்படுகிறது; ஆனால், மெட்ரோ வளாகத்துக்குள் மதுபானம் அருந்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ஒழுங்குமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், தவறான நடத்தை எதிர்பார்க்கப்படவில்லை என்றும் மீறல் ஏற்படுமாயின் உரிய சட்டவிதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.