
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பள்ளியாடி கிராமத்தில் அசோகன்(51) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(23) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.ஏ படித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தார்.
கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் ரொம்ப நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் ஸ்ரீராமின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஸ்ரீராம் தூக்கில் தொங்கினார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஸ்ரீராமை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீராமை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.