
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் சமையல் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு தேர்தல் நடக்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியை குறைத்து நாடகமாடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. மத்திய பாஜக அரசு தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திருக்காமல் சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.