தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் தமிழ் படம். பாலிவுட்டில்  கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாகவும் அறிமுகமாக இருக்கிறார். அனுராக் பாசி இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்படிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படக்குழுவினரோடு கூட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது கார்த்தி ஆர்யனுக்கு பின்னாள் ஸ்ரீலீலா நடந்து சென்றார். அப்போது திடீரென்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்திற்குள் ஸ்ரீலிலாவை இழுத்துள்ளார். மேலும் கூட்டத்திற்கு இழுக்கப்படுவதற்கு முன்பு பாதுகாவலர் தடுத்துள்ளார்கள் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.